மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாளக்குடி பகுதியில் ஏ. டி.எம் கவலாளியான சிவதாணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று வீரநாயக்கன்மங்கலம்-இறச்சகுளம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சிவதாணுவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவதாணுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிவதாணுவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது டெம்போ என்பதும், விபத்து நடந்ததை பார்த்த ஓட்டுநர் தப்பி ஓடியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் தப்பி ஓடிய டெம்போ ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்