Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

காலையில் எழுந்ததும் காபி, டீ குடிக்கிறோம் நல்லதுதானா..? இயற்கை பானங்கள் பருகி பாருங்கள்..!!

காலையில் நாம் அனைவரும் எழுந்ததும்  பருகுவதற்காக அருமையான டிப்ஸ்:

காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீ குடித்தால்தான் பெரும்பாலானவர்களுக்கு பொழுது விடிந்த மாதிரி இருக்கும். ஆனால் இது ஆரோக்கியமான பழக்கம்தானா என்ற கேள்வியும் அவர்கள் மனதுக்குள் ஒதுங்கிக் கிடக்கும்.

உண்மையில், நம் உடல் ஒருநாள் முழுக்க எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தே உள்ளது. எனவே காலையில் நாம் முதன்முதலில் பருகுவது நம் உடல்நிலையைப் பொறுத்தும், சூழ்நிலையைப் பொறுத்தும்தான் இருக்க வேண்டும்.

தண்ணீர்:

ஒருநாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும்.
குளிர்ந்த நீரைப் பருகுவது நல்லதே. ஏனெனில் குளிர்ந்த நீருக்கு அசிடிட்டியைக் குறைக்கும் தன்மை, வெந்நீரைக் காட்டிலும் அதிகம்.

வெறும் தண்ணீருக்குப் பதிலாக வெந்தயத் தண்ணீர் கூட அருந்தலாம். வெந்தயத்தை முந்தைய நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து, மறுநாள் வெறும் வயிற்றில், ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும். வாயில் வெந்தயத்தை அப்படியே போட்டுத் தண்ணீர் குடிப்பது, மோருடன் சேர்த்துக் குடிப்பது கூடாது.

நம் ஆரோகத்திற்கான முக்கிய சாறுகள்:

1. அருகம்புல் சாறு:

அல்சர் நோயாளிகளுக்கு ஏற்ற பானம் அருகம்புல் சாறுதான். ஆனால் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அருகம்புல் பொடி நம் உடலுக்கு உகந்தது அல்ல. அருகம்புல் செடியை வீட்டில் அரைத்துச் சாறு எடுத்து, வெந்நீருடன் பருகுவது நல்லது.

2.வெள்ளை பூசணி சாறு:

வெறும் வயிற்றில் வெள்ளைப்பூசணி சாறு குடித்து வந்தால் தொப்பை, ஊளைச்சதை விரைவில் குறையும். கூடவே, இதனுடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்வதன் மூலம் முழுப் பலனையும் பெறலாம்.

3.இஞ்சிச்சாறு:
இஞ்சித் தோலை நீக்கிவிட்டு, சாறு எடுத்து அதோடு தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம். இதனால் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு குறைவதுடன் நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும்.

4.நெல்லிச்சாறு:

தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். இதில் ஆன்டிஆக்சிடன்ட்கள் அதிகளவு இருப்பதால் சருமப் பாதுகாப்புக்கும், சிறுநீரகத் தொற்று நோய்களுக்கும் மிகவும் சிறந்தது.

5. இளநீர்;

இயற்கை தந்த வரப்பிரசாதங்களில் ஒன்றான இளநீர் உடலுக்கு நன்மை தந்தாலும் வெறும் வயிற்றில் குடிக்க கூடாது. ஏனெனில் இதன் அதிகப்படியான குளிர்ச்சியூட்டும் தன்மையால், வயிற்றில் புண்கள் ஏற்படலாம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.

மேலும் வெறும் வயிற்றில் குடிக்கும்போது, இளநீரில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், குளுக்கோஸ் போன்ற தாதுக்கள் வெளியேற முடியாமல் சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடலா

6. நீராகாரம்:

காலையில் எழுந்த உடன் நீராகாரம் அருந்துவதை இன்றளவும் கிராமப்புறங்களில் பலரும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதன் மூலம் உடலுக்குக் குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கின்றன.

 

Categories

Tech |