சட்டவிரோதமாக கொண்டு வந்த புகையிலை பாக்கெட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆடூர்கொளப்பாக்கம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக அட்டை பெட்டியுடன் வந்த முதியவரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனால் அவர் பெட்டியை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த பெட்டியை சோதனை செய்தனர். அந்த சோதனையில் பெட்டியில் சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அட்டை பெட்டியில் இருந்த 7 ஆயிரம் புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 196 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்களை கொண்டு வந்த அந்த முதியவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.