சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நல்லான்பிள்ளைபெற்றான் பகுதியில் ஓட்டுநரான தினகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தினகரன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தினகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.