Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து…. வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் பலி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் வடமாநிலத்தை சேர்ந்த கீதர்(30), ராம் ரஞ்சித்(32) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் ராம் ரஞ்சித் மற்றும் கீதர் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தண்டலம் பகுதி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் வாகன ஓட்டிகள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |