Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!

சிறுவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள 2-வது ரயில்வே கேட் அருகே இருக்கும் தண்டவாளத்தில் ஒரு சிறுவன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் பலவஞ்சிபாளையம் மூகாம்பிகை நகரைச் சேர்ந்த விமல்ராஜ்(17) என்பது தெரியவந்துள்ளது.

இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுவனுக்கு திக்குவாய் இருந்துள்ளது. இதனையடுத்து சிறுவன் எழுதிய கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் எனது நண்பர்களுடன் சகஜமாக பேச முடியவில்லை. இதனால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என சிறுவன் அதில் எழுதியுள்ளார். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |