Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…. குழந்தையை கொஞ்சும் பூனை குட்டி…. செம க்யூட் வீடியோ…. வைரல்…!!!!!!!

குழந்தைகள் அதன் பெற்றோரிடம் எந்த அளவிற்கு பாசமாக இருக்குமோ அதே அளவிற்கு அந்த வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகள் இடமும் பாசமாக இருக்கும். பெரும்பாலும் பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகள்தான் வளர்ப்பு பிராணிகளிடம் ஒட்டிக்கொள்ளும். அதே போல விலங்குகளும் குழந்தைகளிடம் பாசமாக தான் இருக்கின்றது. விலங்குகள் மற்றும் குழந்தைகளிடையே இதுபோன்ற பாசப்பிணைப்பு காட்சிகள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நம் அன்றாட இணையதளங்களில் காணும் பல கண்கவர் காட்சிகள் மனதிற்கு இதம் அளிக்கும் விதமாக அமைந்து இருக்கின்றது. அதிலும் குறிப்பாக இது போன்ற காட்சிகள் மென்மேலும் இதயங்களை இலகுவாக்குகிறது.

https://twitter.com/i/status/1533863792928378880

 

யோகி என்ற கணக்கு பதிவு பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த வைரல் வீடியோவில்  ஒரு தரையில் சாம்பல் நிறம் மற்றும் வெண்மை நிறம் கலந்த பூனை படுத்துக் கொண்டிருக்கின்றது. அந்தப் பூனையின் மீது ஒரு குழந்தையும் படுத்து இருப்பதை பார்க்க முடிகின்றது. அதன்பின் அந்த குழந்தை பூனைக்கு முத்தம் கொடுத்துவிட்டு பூனையின் மீது படுத்துக் கொள்கின்றது. அதன் பின்னர் அந்த பூனையும்  அந்த குழந்தையின் தலையை மெதுவாக வருடி முத்தம் கொடுக்கிறது. இந்த காட்சி பூனைக்கும் குழந்தைக்கும் இடையேயான பாசப் இணைப்பினை வெளிக்காட்டுகின்றது. இந்த அழகான வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றம் பல்லாயிரக்கணக்கான இணையதள வாசிகள் கண்டு ரசித்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோவிற்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலைகளும் பலவிதமான கமெண்டுகளும் குவிந்து வருகின்றது. இந்த வீடியோவுடன் பூனை குழந்தையை மிகவும் நேசிக்கிறது என்ற வரியும் அதில்  சேர்க்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |