Categories
உலக செய்திகள்

நபிகள் நாயகம் குறித்த கருத்திற்கு எதிரான போராட்டம்…. இந்தியர்களை நாடு கடத்த குவைத் அரசு முடிவு…!!!

குவைத் அரசாங்கம், நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் இந்திய மக்களை நாடு கடத்த தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் இருக்கும் பகாஹீல் என்னும் பகுதியில் நபிகள் நாயகம் பற்றி பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா பேசிய சர்ச்சைக்குரிய கருத்தை எதிர்த்து முஸ்லிம்கள் மிகப்பெரிய கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். சவுதி அரேபியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம்.

அதிலும் பிற நாட்டை சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கட்டாயமாக அனுமதி கிடையாது. சட்டத்தை மீறி ஆர்பாட்டம் நடத்தியவர்களை கண்டுபிடிக்கும் பணியை உளவுப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்து அவரவர் சொந்த நாடுகளுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டது. மேலும், குவைத்திற்குள் மீண்டும் வர அனுமதி மறுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |