இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணம். இது வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்ல. பல்வேறு சரிபார்ப்பு களுக்கும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆதார் கார்டில் உள்ள அனைத்து தகவல்களும் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டிருக்கும். சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். ஆதார் கார்டை பயன்படுத்தி கடன் வாங்கும் வசதியும் தற்போது உள்ளது.
இவ்வாறு பணம் சார்ந்த பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் இந்த ஆதார் கார்டை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம். ஒருவரின் ஆதார் கார்டை மற்றொருவர் தவறாக பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆதார் கார்டில் உள்ள தனிநபரின் தகவல்களைத் திருடி வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே அனைவரும் ஆதார் கார்டு விஷயத்தில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள 11 கோடி விவசாயிகளின் ஆதார் கார்டு விவரங்கள் கசிந்துள்ளதாக வெளியாகியுள்ளது. Pm-kisan இணையதளத்தில் பயனாளிகளின் ஆதார் கார்டு விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அந்த இணையத்தளத்தில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக இந்த தவறு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அதுல் நாயர் கண்டுபிடித்துள்ளது. அதனைப்போலவே ஆதார் விவரங்கள் ஆன்லைனில் கசிவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் நிறைய பேரின் ஆதார் விவரங்கள் கசிந்தது. தற்போது 11 கோடி விவசாயிகளின் ஆதார் கார்டு விவரங்கள் கசிந்துள்ள தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.