இந்தியாவின் தேசிய பென்ஷன் திட்டத்தை பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA நிர்வகித்து வருகின்றது. இந்தத் திட்டத்தில் ஏராளமான தனியார் துறை ஊழியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் முதலீடு செய்கிறார்கள். இந்த நிலையில் திட்டத்தின் பயனாளிகள் புதிதாக வாட்ஸ்-அப் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வசதியின் கீழ் பயனாளிகள் தங்களது அனைத்து கேள்விகளுக்கும் வாட்ஸ் அப் மூலமாக எளிதில் பதிலை தெரிந்து கொள்ள முடியும். இந்த வசதியை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி இனி விரிவாக பார்க்கலாம்
- முதலில் உங்கள் மொபைலில் 8588852130 என்ற எண்ணை பதிவு செய்துகொள்ளவும்.
- வாட்ஸ் அப்பில் இந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பவும்.
- உங்களுக்கு இப்போது வரும் மெசேஜில் தேசிய பென்சன் திட்டம் சார்ந்த பல ஆப்ஷன்கள் வரும்.
- அதில் உள்ள கேள்விகளில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
- பட்டியலில் உங்களுக்கான கேள்வி இல்லை எனில் ‘Need more help’ ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- பிறகு உங்கள் பிரச்சினை குறித்து தேசிய பென்சன் திட்ட அறக்கட்டளைக்கு grievances @npstrust.org.in இமெயில் வாயிலாக குறைகளை தெரிவிக்கலாம்.
- இதுபோக, 1800 222 080 இலவச எண்ணை அழைத்தும் தகவல்களை பெறலாம்.