Categories
சினிமா

BREAKING: கண்ணீருடன் பிரபல நடிகர்…. சற்றுமுன் பரபரப்பு பேட்டி…..!!!!

பிரபல இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர்கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த சிகிச்சையில் அவருக்கு வயிற்று பகுதியில் ரத்தக்கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பிறகு அவர் குணம் அடைந்து வந்தாலும் தொடர்ந்து மருத்துவமனையில் ஓய்வுக்காக இருந்தார். இதனைத் தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக அவர் வெளிநாடு அழைத்துச் செல்லப்படுவதாகவும் தகவல் வெளியாகியது. இந்த நிலையில் வருகின்ற 16ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சற்றுமுன் பேட்டியளித்த நடிகர் டி.ராஜேந்தர்,”உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறேன். நான் வாழ்க்கையில் எதையும் மறைத்தது கிடையாது” என்று தெரிவித்தார். மேலும் நான் நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து அவர்களுக்கு நன்றி, யார் என்ன செய்தாலும் விதி, இறைவனை மீறி எதுவும் நடக்காது என்று கண்ணீருடன் கூறினார்.

Categories

Tech |