மனைவியை கொலை செய்த வழக்கில் கைதான கணவர் குழந்தை இல்லாததால் அடித்துக் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் முல்லை நகரைச் சேர்ந்த என்ஜினீயர் தனுஸ்ரீ, கீர்த்தி ராஜ் சென்ற மூன்று வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் தற்பொழுது ரெட்டி பெட்டியில் தனியாக வசித்து வந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்திருக்கின்றது.
இந்நிலையில் சென்ற 11ம் தேதியும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த கீர்த்தி ராஜ் கிரிக்கெட் மட்டையால் மனைவியை அடித்து கொலை செய்து இருக்கின்றார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தார்கள்.
இதுபற்றி போலீசார் கூறியதாவது, கீர்த்தி ராஜூக்கும் தனுஸ்ரீக்கும் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. ஆகையால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருக்கின்றது. மேலும் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என உறவினர்கள் அடிக்கடி கேட்டுயிருக்கின்றனர். இதனால் மனைவி மீது கோபத்தில் இருந்திருக்கின்றனர் கீர்த்தி ராஜ்.
இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு குழந்தையில்லாத கோபத்தில் வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து தனுஸ்ரீயின் தலையில் அடித்து கொலை செய்து இருக்கின்றார். அதனால் தனுஸ்ரீயின் தலையில் இருந்து ரத்தம் வழிய மீண்டும் கீர்த்தி ராஜ் துப்பட்டாவால் கழுத்தை நெருக்கி கொலை செய்து இருக்கின்றார். பின் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி இருக்கின்றார். தனுஸ்ரீயின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியாகி இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.