Categories
மாநில செய்திகள்

7 மாத கர்ப்பிணி…. குழந்தைக்கு நடந்த கொடூரம்…. பெரும் சோக சம்பவம்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள சின்னபொம்பட்டி கிராமத்தில் பிரபு என்பவர் வசித்துவருகிறார். இவரது மனைவி நித்யா. இவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு மருத்துவர்கள் இல்லாததால் வீட்டிற்கு செல்லும் படி மருத்துவத்துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை வீட்டிற்கு திரும்பி மறுபடியும் சனிக்கிழமை காலை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டிய சமயத்தில் ஊழியர்கள் சரிவர சிகிச்சை அளிக்காமல் இருந்துள்ளனர். மேலும் நித்யா வையே குளுக்கோஸ் போன்றவை கற்றுக்கொள்ள கூறியுள்ளனர். அதனால் நித்யா பெரும் அவதி அடைந்துள்ளார்.

அப்போது நித்யாவின் வயிற்றில் இருந்த குழந்தை இறந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதனால் பதற்றம் அடைந்த உறவினர்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நித்யாவை வயிற்றில் குழந்தை இறந்த நிலையில் இருக்கும்பொழுது கிருஷ்ணகிரி அரசு மருத்துவனைக்கு அங்கிருந்த ஊழியர்கள் அனுப்பி வைத்தனர். இதனால் நித்யாவின் உறவினர்கள் மேலும் கடும் கோபத்திற்கு ஆளாகினர். ஏற்கனவே சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டபோது ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணன் இதற்கு மாற்று சிகிச்சைக்கு அனுப்பாமல் தற்போது குழந்தை இறந்தது தெரிந்தவுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்புவது வேதனைக்கு உள்ளானதாக இருக்கிறது. இதுபோன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது என்று உறவினர்கள் கோபத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |