மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையில் இருந்து சென்ற 24ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சென்ற 8ஆம் தேதி பாசனத்திற்காக அணையில் இருந்து 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிகரித்ததை அடுத்து சென்ற 9-ந்தேதி தண்ணீர் திறப்பு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
தற்பொழுது பாசனத்திற்காக தண்ணீர் தேவை மீண்டும் அதிகரித்திருக்கின்றது. இதனால் நேற்று காலை முதல் பாசனத்திற்காக 15 ஆயிரம் கன அடியாக தண்ணீர் அதிகரிக்கப்பட்டு திறந்து விடப்பட்டுள்ளது.