Categories
தேசிய செய்திகள்

ஏர் இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்…. எதற்கு தெரியுமா?….. மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

ஏர் இந்தியா நிறுவனம் டிக்கெட் இருந்தும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படாத பயணிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இதனையடுத்து ரூ.10 லட்சம் அபராதம் விதித்து டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து டிஜிசிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில்,” பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி ஆகிய இடங்களில் டிஜிபிஏ சோதனை செய்தபோது, ஏர் இந்தியா சார்ந்த சில விவகாரங்களில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாதது தெரியவந்தது.

இதுகுறித்து ஏர் இந்தியாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது. இது ஒரு முக்கியமான பிரச்சினையாகும். இது போன்ற செயல்களை ஏற்கவே முடியாது. ஏர் இந்தியாவின் பதில்களை கேட்ட பின் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் இது போன்ற பிரச்சினைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏர் இந்தியாவுக்கு டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது

Categories

Tech |