அமெரிக்காவின் சிறந்த உணவகத்திற்கான விருதினை, வட கரோலினாவில் உள்ள இந்திய உணவகமான “சாய் பானி” என்ற உணவகம் பெற்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜேம்ஸ் பியர்ட் என்ற அறக்கட்டளையின் சார்பாக, உணவு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் கொரோனா தொற்றின் காரணமாக விருது விழாவானது ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்தாண்டிற்கான, உணவு விருதுகள் வழக்கம் போல் சிகாகோவில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த விழாவில் சிறந்த உணவகமாக, இந்திய சிற்றுண்டி உணவுகளை வழங்கும், வட கரோலினாவில் உள்ள மலிவு விலை உணவகமான “சாய் பானி” என்ற உணவகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சிறந்த மற்றும் புதிய உணவகமாக மினியாபோலிஸ் என்ற நகரில் உள்ள “ஓவாம்னி” தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறந்த சமையல்காரராக மஷாமா பெய்லி மற்றும் வளர்ந்து வரும் சமையல்காரராக எட்கர் ரிகோவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.