கார் தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்த விபத்தில் திராவிடர் கழக மாநில செயலாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 7-வது வார்டு லண்டன் மிஷன் ரோடு பகுதியில் கே.சி. எழிலரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியின் சகோதரர் ஆவார். மேலும் எழிலரசன் திராவிடர் கழக மாநில செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் எழிலரசன் ஏலகிரி மலைக்கு காரில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரின் மீது மோதி கவிழ்ந்துவிட்டது.
இந்த விபத்தில் எழிலரசன் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனத்தை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.