லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு தினம்தோறும் உள்நாடு மட்டும் இன்றி வெளி நாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் தற்போது கோடை விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்து செல்கின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த 2 மாதங்களில் மட்டும் 4 லட்சத்து 100 சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம் பார்வையிட்டுள்ளனர். ஆனால் தற்போது திருவள்ளுவர் சிலையில் கலவை பூசும் பணி நடைபெறுவதால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.