Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! குழப்பம் தீரும்…! வெற்றி கிடைக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே..!
இன்று காலை நேரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டியிருக்கும்.

மனக்குழப்பங்கள் தீரும். திட்டமிடாமல் செய்த காரியங்களில்கூட வெற்றி உண்டாகும். உறவினர்களால் விரையம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கடினமான காரியங்களையும் திறமையாக செய்து முடிப்பீர்கள். அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமைச்சேரும்.

மனம் நிம்மதியளிக்கும். காதலில் உள்ளவர்களுக்கு சிறப்பான தருணங்கள் இன்று அமையும். மனமும் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியளிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |