Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! சுமை நீங்கும்…! தெளிவு கிடைக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே…!
இன்று உங்கள் தொழிலில் தன்னம்பிக்கையும் மனதில் மகிழ்ச்சியும் ஏற்படும்.

வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை ஏந்தி வருமானத்தை ஈட்டுவீர்கள். குடும்ப சுகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் வருமானம் எப்பொழுதும் போலவே உள்ளது. வருமானத்திற்கு உங்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும். உறவினர்கள் மூலம் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களை வந்து சேரும். உங்கள் நண்பர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். இன்று நீங்கள் செய்கின்ற முயற்சியில் கூட முன்னேற்றம் உள்ளது. யாரைப்பற்றியும் எவ்விதமான விமர்சனங்களும் வேண்டாம். இன்று நீங்கள் யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனம் தெளிவுபெறும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். இன்று நீங்கள் பயணங்கள் செல்ல நேரிடும். பயணத்தின் போது கவனம் தேவை, உங்கள் உடைமைகளை நீங்கள்தான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

வேலைக்கு செல்லும் பெண்கள் உயர் அதிகாரிகளிடம் கவனத்துடன் பேச வேண்டும். எப்பொழுதுமே பெண்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். சில நம்பிக்கையான நபர்களிடம் கூட நீங்கள் எச்சரிக்கையுடன் இருப்பது சிறந்தது. கடன் விபகாரங்கள் அவ்வப்போது தலை தூக்கினாலும் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை.
திருமணமாகாதவர்களுக்கு வரன்கள் கைகூடும்.

நல்ல வரன்களை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லை வரன்கள் வரவில்லை என்றால் நீங்கள் சிறிது முயற்சிகளால் செய்ய வேண்டும். இன்று காதலில் உள்ளவர்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ள வேண்டும். இன்று மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது நீலம் நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. நீலம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 3 மற்றும் 5. அதிர்ஷ்டமான நிறம் நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |