கும்பம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாளில் நீங்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு உல்லாசமாக பயணங்களிலும் செல்லலாமா என்று எண்ணங்கள் வரும்.
மன உளைச்சலில் இருந்து எப்போது வெளி வருவோம் என்று எண்ணங்களும் அவ்வப்போது தோன்றும். அதற்கு நேர்மாறாகவே சந்தோஷம் பொங்கும். இன்று உங்கள் காதல் மனைவியும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அவர்கள் மூலம் உங்களுக்கு தனவரவு வர வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கை கூடும் செல்வமும் பெருகும். நீங்கள் நினைத்ததும் கண்டிப்பாக நடந்து விடும். சுற்றுலா செல்ல முயற்சி நல்ல விதத்தில் நடக்கும். எந்த ஒரு விஷயத்திலும் எளிதாக நீங்கள் நல்ல பலனை பெற்றுக் கொள்வீர்கள். எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிப்பதில் நீங்கள் திறமைசாலியாக இருப்பீர்கள். புத்திக் கூர்மையுடன் நீங்கள் எதிலும் ஈடுபடுவீர்கள். இன்று உங்களுக்கு பண வரவிற்கு குறைவே இல்லை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்தமான சூழல் கூட மாறிவிடும்.
உங்களுடைய அணுகுமுறையினால் அனைத்துக் காரியங்களிலும் முன்னேற்றம் உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ள கூட்டாளிகளிடம் நீங்கள் அனுசரித்து செல்வது உங்களுக்கு நன்மையை கொடுக்கும். இன்று நீங்கள் கடின முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். யாரைப்பற்றியும் எவ்விதமான கேலி கிண்டல் பேச்சுக்கள் வேண்டாம். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் உங்களுக்கு அதிகரித்தே காணப்படுகிறது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே நெருக்கம் கூடும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மழலைச் செல்வம் கிட்டும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும்.
நீங்கள் எடுத்த அனைத்து முயற்சியும் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். காதலில் உள்ளவர்களுக்கு கூட காதல் கண்டிப்பாக கைகூடி திருமணத்தில் வந்து முடியும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 3 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.