Categories
பல்சுவை

செம க்யூட்…. ஆட்டுக்குட்டியை அம்மாவிடம் சேர்க்க….. சிறுவன் செய்த காரியம்…. வைரல்….!!!

தனது தாயைப் பிரிந்து தவித்து வந்த ஆட்டுக்குட்டியின் தாயை கண்டுபிடிக்க உதவும் ஒரு சிறுவனின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆட்டுக்குட்டியை அதன் தாயிடம் சேர்ப்பதற்காக அந்த குழந்தை எவ்வளவு முயற்சி செய்கிறது என்பதை அந்த வீடியோவில் நாம் பார்க்க முடிகிறது. தொலைந்து போன அந்த சிறிய ஆட்டுக்குட்டியுடன் வயலில் சூப்பர் மரியோ போல் உடையணிந்து சிறுவன் இருக்கிறான். தனது தாயை தேடி அந்த ஆட்டுக்குட்டியை பல இடங்களில் அலைகிறது.

தாய் ஆட்டை கண்ட சிறுவன்,ஆட்டுக்குட்டியை அதன் தாயை நோக்கி செல்ல திசை காட்டுகிறான். ஆட்டுக்குட்டிக்கு புரிவது போல அதனுடன் பேசி அதன் தாய் இருக்கும் திசையை அவன் சுட்டிக்காட்டி போக சொல்கிறான். ஆட்டுக்குட்டி தன் தாயுடன் சேரும்வரை அதனுடைய அந்த சிறுவன் இருந்துள்ளான். அந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |