பெரம்பூர் ரயில் நிலையத்தில் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் உரிய பயணச்சீட்டு இல்லாமல் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்த 683 பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென ரயில்வே காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் மொத்தம் ரூ.3,38,560 அபராதம் வசூல் செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திடீரென எக்ஸ்பிரஸ் ரயிலில் நடத்தப்பட்ட சோதனையில் லட்சக்கணக்கில் அபராதம் வசூலிக்கப்படும் சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.