மெக்சிகோ நாட்டில் அரசியல் ஆலோசகராக வசித்து வருபவர் டேனியல் பிகாசோ(31) ஆவார். இவர் அந்நாட்டின் நாடாளுமன்ற சட்டகுழுவில் ஆலோசகராகவும் பணிபுரிந்து இருக்கிறார். இந்நிலையில் மெக்சிகோவின் மத்திய மாகாணமான பாபட்லசோல்கோ நகரில் ஒரு குழந்தை மர்ம நபர்களால் கடத்தப்பட்டது. இக்குழந்தை கடத்தலில் டேனியல் பிகாசோவுக்கு முக்கிய தொடர்பு உள்ளதாக உள்ளூர் வாட்ஸ்அப் குழுவில் வதந்தி பரவியது. இந்த சூழ்நிலையில் டேனியல் பிகாசோ, பாபட்லசோல்கோ நகரிலுள்ள தன் தாத்தா வீட்டுக்கு சென்றார்.
அப்போது உள்ளூரை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் டேனியல் பிகாசோவை சூழ்ந்துகொண்டு அவரை சரமாரியாக தாக்கினர். இந்த நிலையில் அங்கு வந்த காவல்துறையினர் கும்பலிடமிருந்து டேனியல் பிகாசோவை மீட்டு போலீஸ் ரோந்து வாகனத்தில் ஏற்ற முயற்சி செய்தனர். எனினும் அதையும் மீறி அந்த கும்பல் டேனியல் பிகாசோவை அருகிலிருந்த வயல் வெளிக்கு இழுத்து சென்று, அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டனர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.