காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதாக ஐகோர்ட் கூறியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு மாணிக்கவேல் என்ற காவலர் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். இவர் காவலர் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 2014-ஆம் ஆண்டு காவலர் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் உத்தரவை மதிக்காமல் இந்த ஆண்டு தான் வீட்டை காலி செய்திருப்பதாகவும், அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை எனவும் நீதிபதி கூறினார்.
அதன்பிறகு காவல்துறை உயரதிகாரிகள் எதிர்பார்த்த அளவிற்கு ஒழுக்கத்தை கடைபிடிக்காமல் நடந்து கொள்வது, காவல்துறைக்கு பேரழிவுகளை ஏற்படுத்தும் என நீதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மக்கள் மத்தியில் காவல்துறையின் மீது அதிக அளவில் குற்றங்கள் சுமத்தப் படுவதாகவும், உயரதிகாரிகளின் வாகனங்களில் கருப்பு பிலிம் ஒட்டுதல், காவல்துறையினரின் வாகனங்களில் காவல்துறை பெயரை தவறாக பயன்படுத்துவது, தங்களுடைய வீடுகளில் ஆர்டர்லி என்ற பெயரில் வீணான செயல்களை செய்வது உள்ளிட்ட பல குற்றசாட்டுகள் காவல்துறையினர் மீது இருப்பதாகவும் நீதிபதி கூறினார்.
இப்படி பல குற்றச்சாட்டுகள் காவல்துறையினர் மீது இருப்பினும் அரசாங்கம் அதை கண்டு கொள்வதில்லை. இதனையடுத்து காவல்துறையினர் மீது பொது இடங்களில் சுமத்தப்படும் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுத்து சட்ட ஒழுங்கை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுபோன்ற குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவதாகவும், இந்த குற்றங்களை பொறுத்து கொள்ள முடியாது எனவும் நீதிபதி கூறினார். மேலும் காவல்துறையினர் மீது சுமத்தப்படும் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுத்து அரசு அதற்கான உரிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், விசாரணையை ஜூன் 21-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் நீதிபதி கூறினார்.