தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்கள், கிராம ஊராட்சி உறுப்பினர் களுக்கு அமர்வு படியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகள் கூட்டங்களில் கலந்துகொள்ளும் நாட்களில் அமர்வுப்படி தொகை பத்து மடங்காகவும், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு ஐந்து மடங்காகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியக்குழு தலைவர் மற்றும் பிரதிநிதிகளுக்கு மாதம் ஒன்றிற்கு 1 அமர்விற்கு மட்டும் அமர்வுப்படி 10 மடங்கு உயர்த்தியும், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர்களுக்கு மாதம் ஒன்றிற்கு 1 அமர்விற்கு மட்டும் அமர்வுப்படி ஐந்து மடங்காக உயர்த்தியும் அரசாணை வெளியிட்டுள்ளது.