Categories
மாநில செய்திகள்

திருச்சி மக்களே! மழைக்காலத்திற்கு முன்பாக…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!

பாதாள சாக்கடை பணிகள் மற்றும் சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவாக முடிக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

திருச்சி மாவட்டத்திலுள்ள குடமுருட்டி ஆற்றுபாலம் முதல் பஞ்சப்பூர் வரை சாலைகள் அமைக்கப்பட இருக்கிறது. இதனையடுத்து குழுமாயி அம்மன் கோவில் அருகே கோரையாற்று கரைகளை பலப்படுத்தி மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் கே.என் நேரு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆய்வு செய்தனர். அதன்பிறகு அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் குடமுருட்டி முதல் பஞ்சப்பூர் வரை ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட இருக்கிறது.

இதற்காக கோரையாற்று கரைகளை பலப்படுத்தி சாலைகள் அமைக்க இருக்கிறோம். இதனால் வயலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும். இங்கு சாலைகள் அமைக்கப்பட இருப்பதால் மக்களுக்கு போக்குவரத்திற்கான சிரமம் இருக்காது. இதனையடுத்து திருச்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் விரைவாக முடிக்கப்படும் எனவும், மழைக்காலத்திற்கு முன்பாக சாலைகள் அமைக்கப்படும் எனவும் கூறினார். இந்த ஆய்வின் போது திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்ளிட்ட பல அதிகாரிகள் உடனிருந்தனர்.

Categories

Tech |