Categories
தேசிய செய்திகள்

தங்கக் கடத்தல் விவகாரம்….”தேவைப்படும்போது ஆதாரத்துடன் நிரூபிப்பேன்”… ஸ்வப்னா பரபரப்பு பேட்டி…!!!!!!

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை  பல முறை சந்தித்துள்ளேன் என ஸ்வப்னா தெரிவித்துள்ளார்.

கேரளாவில் நடைபெற்ற தங்க கடத்தல் விவகாரத்தில் கைதான ஸ்வப்னா தற்போது ஜாமினில் விடுதலையாகியுள்ளார். தற்போது வெளியிலிருக்கும் ஸ்வப்னா தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்-மந்திரி பிரனாயி விஜயனுக்கும்  அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு உள்ளதாக கூறியுள்ளார். இதனையடுத்து பினராயி விஜயன் பதவி விலக கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இது பற்றி பினராயி விஜயன் பேசும்போது, ஸ்வப்னா தனக்கு தெரியாது. இது எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதி எனவும் தெரிவித்துள்ளார்.

பிரனாய் விஜயன் தன்னை  தெரியாது என்று கூறியது பற்றி நிருபர்கள் ஸ்வப்னாவிடம் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது, கேரள முதல்-மந்திரி பிரனாயி  விஜயன் என்னை தெரியாது என்று தெரிவித்துள்ளார். நான் அவரை திருவனந்தபுரத்தில் உள்ள அரசு அலுவலக வீட்டில் பல முறை சந்தித்து இருக்கின்றேன். அது மட்டுமல்ல அவரது குடும்பத்தினரையும் சந்தித்து பேசி இருக்கிறேன். மேலும் தேவைப்படும் போது அதனை ஆதாரத்துடன் தெரிவிப்பேன் என கூறியுள்ளார். ஸ்வப்னாவின்  இந்த பேட்டி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |