உலகின் மிகஉயரமான தபால் நிலைய அலுவலகம் தபால் பெட்டி வடிவில் கட்டப்பட்டுள்ளது.
இமாச்சலபிரதேசத்தின் ஸ்பிட்டி மாவட்டத்திலுள்ள ஹிக்கிம் உலகிலேயே மிக உயரமான கிராமமாகும். இது கடல் மட்டத்திலிருந்து சுமாா் 14,400 அடி உயரத்தில் இருக்கிறது. இதனால் இந்த கிராமத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகையானது அதிகமாக இருக்கும். இந்த கிராமத்திலுள்ள தபால் நிலையம் உலகின் மிகஉயரமான தபால் நிலையமாகும். இந்த தபால் நிலையம் கடந்த 1983-ஆம் வருடம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் விதமாக இங்கு உள்ள தபால்நிலையத்தை தபால்பெட்டி வடிவத்தில் கட்டியிருக்கின்றனர். இந்த தபால் நிலையத்தை இமாச்சலபிரதேச தலைமை தபால் மாஸ்டா் வந்திதா கவுல் திறந்துவைத்தாா். இதுகுறித்து வந்திதா கவுல் கூறியதாவது “இங்குள்ள தபால் நிலையம் போல் நாட்டில் வேறு எங்குமில்லை. உலகம் முழுதும் இருந்து வரக்கூடிய சுற்றுலாபயணிகள் இங்கு இருந்து தங்களது அன்பானவா்களுக்கு கடிதங்களை அனுப்புகிறாா்கள். சுற்றுலாவின் பாா்வையில் இது மிகவும் முக்கியமானது என்பதை நிரூபிக்கும்” என அவா் தெரிவித்தார்.