நீரில் மூழ்கி ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூடான் நாட்டில் இருந்து சவுதி அரேபியாவிற்கு கப்பல் மூலமாக ஆடுகள் கொண்டு செல்லப்பட்டது. அதில் மொத்தம் 15,800 ஆடுகள் இருந்தது. இந்த ஆடுகளை ஏற்றி சென்ற கப்பல் சுவாகின் துறைமுகத்தில் இருந்து கிளம்பி சென்றது. இந்நிலையில் கப்பல் செங்கடலில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஆடுகளின் எடை தாங்காமல் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் இருந்து 780 ஆடுகள் மீட்கப்பட்ட நிலையில் 15 ஆயிரம் ஆடுகள் நீரில் மூழ்கி உயிரிழந்தது. மேலும் 9000 ஆடுகளை மட்டுமே ஏற்றிச் செல்லவேண்டிய கப்பலில் 15,800 ஆடுகளை ஏற்றிச் சென்றது தான் விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.