Categories
மாநில செய்திகள்

FLASH NEWS : குடும்ப தலைவிகளுக்கு ₹1,000….. அரசு சொன்ன சூப்பர் தகவல்….!!!!

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து அமைச்சர் பிடிஆர் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கட்சி அமோக வெற்றி பெற்றது. இதில் திமுக மற்றும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து தமிழக முதல்வராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். திமுக தேர்தல் அறிக்கையில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவருக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்று ஒரு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இதுதொடர்பான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையே நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய தமிழக நிதித்துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 ரூபாய் உரிமை தொகை கட்டாயம் வழங்கப்படும். தற்போது நிதி நிலைமை மிக மோசமாக உள்ளது. நிதி நிலைமை சரியானதும் இது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார் .

இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நிதித்துறை அமைச்சர் திமுக தேர்தல் வாக்குறுதியின்படி குடும்ப தலைவிகளுக்கு விரைவில் மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் இதற்கான விவரங்களை சேகரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |