Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலிருந்து வரும் கோதுமை மற்றும் கோதுமை மாவுக்கு தடை…. ஐக்கிய அரபு அமீரகம் அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் இறக்குமதியாகும் கோதுமை மற்றும் கோதுமை மாவு ஏற்றுமதி செய்ய தடை விதித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வர்த்தக ஓட்டத்தை பாதித்துள்ள சர்வதேச சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு பொருளாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இரு நாடுகளுக்கு இடையே விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு அமீரகத்தை யும் இந்தியாவையும் இணைக்கும் திட்டமான உறவுகளை பாராட்டும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி மே 13-ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அல்லது மறு ஏற்றுமதி செய்ய வேண்டும் செய்ய விரும்பும் அமீரக நாட்டு நிறுவனங்கள், அதற்கான அனுமதியை பெறுவதற்கு அமைச்சகத்திடம் கோரிக்கை சமர்பிக்க வேண்டும். அதன் பிறகு உரிய அனுமதி கிடைத்தால் மட்டுமே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மற்றும் கோதுமை மாவை ஏற்றுமதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ரஷ்யா-உக்ரைன் போர் வெடித்ததையடுத்து அமீரகத்துக்கு ரஷ்யாவிலிருந்து கோதுமை இறக்குமதி செய்வது தடைபட்டது.

இந்நிலையில் கோதுமை இறக்குமதி ரஷ்யாவிற்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகம் இப்போது இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளது. மே 13ஆம் தேதியன்று கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியாவில் தடை விதித்ததை தொடர்ந்து ஐந்து நாடுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட இந்தோனேசியா, ஓமன், பங்களாதேஷ் மற்றும் ஏமன் ஆகிய 5 நாடுகள் தூதரக வழிகளில் இந்திய அரசிடம் கோதுமை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. இருப்பினும் அத்தகைய கோரிக்கைகளை மதிப்பீடு செய்ய மத்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குழு இன்னும் முடிவு எதுவும் எடுக்கவில்லை.

Categories

Tech |