இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணங்களை விரும்புகின்றனர். இதில் பயண கட்டணம் மிகக் குறைவு என்பது மட்டுமல்லாமல் உணவு மற்றும் கழிப்பறை போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன. இதில் பயண நேரமும் மிகக் குறைவுதான். அப்படி இரயிலில் பயணம் செய்பவர்கள் முன்னரே டிக்கெட் புக்கிங் செய்வது வழக்கம். அப்படி டிக்கெட் புக்கிங் செய்த பிறகு திடீரென்று ஏதாவது காரணங்களுக்காக தங்களது பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அப்படி ரத்து செய்யும் போது அதற்கான முன்பதிவு கட்டணம் பயணிகளுக்கு திரும்ப வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளது.
அதாவது முன்பதிவு செய்த முழு தொகையும் பயணிகளுக்கு ரிட்டன் கிடைக்காது. தாங்கள் புக்கிங் செய்த பெட்டி, கேன்சல் செய்யக்கூடிய நேரம் ஆகியவற்றைப் பொறுத்து வெவ்வேறு அளவில் ரீபண்ட் தொகை உங்களுக்கு வழங்கப்படும். அப்படி டிக்கெட்டை ரத்து செய்தால் எவ்வளவு ரீபண்ட் கிடைக்கும் என்ற விவரம் பலருக்கும் தெரிவதில்லை. அதற்கான கட்டண பட்டியலை இதில் விரிவாக பார்க்கலாம். நீங்கள் ரயில் புறப்படும் நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட் கேன்சல் செய்தால்,
ஏசி முதல் வகுப்பு – ரூ.240
ஏசி 2ஆம் வகுப்பு – ரூ.200
ஏசி 3ஆம் வகுப்பு – ரூ.180
ஸ்லீப்பர் கிளாஸ் – ரூ.120
செகேண்ட் கிளாஸ் – ரூ.60
இதையடுத்து பயணிகளுக்கான சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு டிக்கெட்டை கேன்சல் செய்தால் பணம் எதுவும் உங்களுக்கு கிடைக்காது. ஒருவேளை நீங்கள் TDR பூர்த்தி செய்திருந்தால் ரீபண்ட் உங்களுக்கு கிடைக்கும். மேலும் கேன்சல் செய்யப்படாத டிக்கெட் எதற்கும் ரீபண்ட் கிடைக்காது என்பதை பயணிகள் அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்-