மத்திய அமைச்சரவை கூட்டம் , குடியரசுத்தலைவருடன் சந்திப்பு என்று இரண்டு சம்பிரதாயங்களை கடந்து இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகின்றது.
2020 ஆம் வருடத்துக்கான பட்ஜெட் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு காரணம் என்னவென்றால் கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவிலே பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச ரீதியாகவும் சரி , இந்தியாவிலும் சரி வளர்ச்சி விகிதம் குறைந்து வருவது நன்றாக அறிந்ததே. 5 சதவீதம் வளர்ச்சி என்பது இந்தியாவைப் பொருத்தவரை மிகவும் குறைவானதாக கருதப்படுகிறது.
ஏனென்றால் இந்தியாவிலேயே ஏழ்மையை ஒழிக்க வேண்டும், வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்றால் அதற்கு வளர்ச்சி விகிதம் குறைந்த பட்சம் 10 % இருக்கவேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு ஆரோக்கியமான நிலைக்கு செல்வதற்கு 8% , 9 % அளவிற்கு வளர்ச்சி விகிதம் இருக்க வேண்டும் என்ற நிலையிலேயே தற்போது 5 சதவீதமாக வளர்ச்சி வீதம் வீழ்ந்திருக்கிறது ஆகவேதான் இதை வேகமாக அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட்டில் எடுக்க இருக்கிறார்.
இது தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முழு வீச்சான முதல் பட்ஜெட். இதற்கு முன்னதாகவே கார்ப்ரேட் எனப்படும் நிறுவனங்களுக்கு மீது விதிக்கப்படும் வரி குறிக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் இன்றைக்கு தனிநபருக்கான வருமான வரியிலும் சலுகை அளிக்கப்படும். அதைவிட முக்கியமாக வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தான் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இது போல பொருளாதார வளர்ச்சி சரியும் நேரங்களில் உட்கட்டமைப்பு காண செலவுகளை அதிகப்படுத்தி , அதாவது மேம்பாலங்கள் , சாலைகள்களை மேம்படுத்துவதற்கான செலவினங்களை விரைவாக அரசு செய்தால் அதன் மூலமாக ஸ்டீல் , சிமெண்ட் , போக்குவரத்து போன்ற துறைகளில் ஒரு ஊக்கம் ஏற்படும். அதன் காரணமாக மற்ற துறைகளில் வேலைவாய்ப்பு உருவாகும். அதேபோல வளர்ச்சி வீதம் அதிகரிக்கும்.அதற்கான நடவடிக்கைகள் இன்று நடவடிக்கை எடுக்கப்படலாம்.
மறைமுக வரிகளை பொருத்தவரை பட்ஜெட் மூலமாக செய்யக்கூடியது மிகவும் குறைவாகவே உள்ளது. ஏனென்றால் ஜிஎஸ்டி வரி விகிதத்தை ஜிஎஸ்டி கவுன்சில் என்று சொல்லக்கூடிய நிதியமைச்சரின் குழு தான் நிர்ணயிக்கிறது. ஆகவே அது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் அதிகம் எடுக்க முடியாது. இப்படியான நிலையில் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும்போது விவசாயம் , நீர்வளம் போன்ற முக்கிய துறைகளுக்கு என்ன ஒதுக்கீடு செய்வார். காப்பீடு போன்ற விஷயங்களில் எந்த மாதிரியான ஒதுக்கீடு செய்யப்படும் போன்றவை மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. என்றால் மத்திய அரசின் மருத்துவ காப்பீடு மூலமாக சலுகைகளை மக்களுக்கு அளிக்க வேண்டும் அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகளிலும் மக்கள் சேவைகளை பெறக் கூடிய நிலை வர வேண்டும் என விரும்புகிறது.
ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் வர வேண்டுமென்றால் அதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன. ஆகவே இது போன்று விஷயங்களை எல்லாம் இன்று நிர்மலா சீதாராமன் தன்னுடைய நிதிநிலை அறிக்கையில் விளக்குகிறார். காலை 9 மணிக்கு சரியாக அவருடைய அலுவலகத்தில் இருந்து நிர்மலா சித்தராமன் புறப்படுகிறார். முதற்கட்டமாக அமைச்சரவை கூட்டம் , பின்னர் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு என்று இரண்டு சம்பிரதாயங்கள் இருக்கின்றனர். அதன் பிறகு 10 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்துவிடுவிடுவார் என அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். சரியாக 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.