நாடு முழுவதும் தொழில் நுட்பங்கள் நிறைந்து எல்லா செயல் முறைகளும் வளர்ச்சி பெற்று உள்ளது. இதற்கு முன் போல் நாம் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கச் செல்வோம். ஆனால் இப்போது உட்கார்ந்த இடத்திலேயே இருந்து பொருட்களை வாங்க முடிகிறது. அதிலும் பணத்தை எண்ணி எண்ணி கொடுக்காமல் டிஜிட்டல் முறையில் டிரானஸாக்ஷன் செய்துகொள்ளும் சவுகரியமான நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி கூகுள் பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற பல ஆப்ஸ்கள் பணத்தை பரிமாறிக்கொள்ள உதவுகின்றன. இவற்றின் மூலம் ஒரே இடத்தில் இருந்துகொண்டே மொபைலுக்கு ரீ-சார்ஜ், மளிகை பில், மின்சார கட்டணம் போன்ற ஏராளமான கட்டணங்களை எளிதான முறையில் செலுத்தி கொண்டு இருக்கிறோம்.
இதில் சவுகரியமான செயல் முறைகள் இருந்தாலும் இதன் மறுபுறம் ஆபத்து நிறைந்து இருக்கிறது. அதாவது உங்களது ஏடிஎம் கார்டு ரகசிய பின் நம்பரை எப்படி மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள மாட்டேங்கிறீர்களோ அதேபோல உங்களது யுபிஐ பின் நம்பரையும் யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அனைத்து வங்கிகளும் சரி, அரசும் சரி தொலைபேசி வழியாக மக்களிடம் பின் நம்பர் குறித்த தகவல்களை கேட்பதில்லை. அப்படி அழைப்பு வந்தால் விவரங்களைச் சொல்ல வேண்டாம் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அப்படி ஏதேனும் மோசடி அழைப்புகள் வந்தால் நீங்கள் வங்கிகளில் அல்லது போலீசில் புகார் அளிக்கலாம்.
அதனைத் தொடர்ந்து யுபிஐ சேவை பயன்படுத்துபவர்கள் மொபைலில் பிரச்சினை ஏற்பட்டால் உங்களுக்கு நெருக்கமான தவிர அறிமுகமில்லாதவரிடம் உங்களது மொபைலை கொடுக்காதீர்கள்.அதுமட்டுமில்லாமல் அடிக்கடி உங்களது யுபேஐ பின் நம்பரை மாற்றி கொள்வது மோசடியில் இருந்து தப்பித்துக் கொள்ள வழிவகுக்கிறது. உங்களது யுபிஐ பின் நம்பரை மாதம் ஒரு முறை, 6 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது 8 மாதங்களுக்கு ஒரு முறை என மாற்றிக் கொள்ளலாம். மேலும் உங்களுக்கு பரிசு, கேஷ்பேக் மற்றும் ஏதேனும் ரிவார்டு கிடைத்து இருப்பதாக செய்திகள் வந்தால் உடனே அந்த இணைப்புகள் செல்லாதீர்கள். அது உங்களது கணக்கில் இருந்து பணத்தை பறிக்க ஒரு மோசடி முறையாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.