Categories
சென்னை மாநில செய்திகள்

17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சினிமா டைரக்டர்…. தாயும் உடந்தை…. பெரும் பரபரப்பு….!!!

சென்னையை சேர்ந்த சினிமா டைரக்டர் கென்னடி என்பவர் சூட்டிங் சம்பந்தமாக தேனி சென்றபோது, அங்கு சினிமாவிற்கு ஆட்களை சேர்க்கும் ரங்கமா என்பவர் மூலம் ஒரு பெண் அறிமுகம் ஆனார். இதையடுத்து அந்தப் பெண்ணுக்கும் கென்னடிக்கும் நாளடைவில் முறையற்ற உறவு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் 17 வயது மகளிடம் எல்லை மீறிய டைரக்டர் கென்னடி,ஒரே நாளில் நான்கு முறை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதற்கு மறைமுகமாக தாயும் உறுதுணையாக இருந்துள்ளார். இதையடுத்து சிறுமி சென்னையில் உள்ள சித்தப்பா வீட்டிற்கு கடந்த வாரம் சென்றுள்ளார். அப்போதே சிறுமியின் போக்கில் மாற்றம் இருப்பதை கண்ட அவரின் சித்தப்பா என்ன நடந்தது என்று கேட்டு விசாரித்துள்ளார். இதையடுத்து தனது தாயும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து துன்புறுத்துவதாக அழுதுகொண்டே சிறுமி கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி என் சித்தப்பா உடனே மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் டைரக்டர் மற்றும் சிறுமியின் தாய் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |