மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் 6 வாரக் காலத்திற்குள் செய்து கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
சென்னையில் வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் சென்னையில் கட்டப்பட்ட 32 மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளின் சுற்றறிக்கையின் படி ரயில் நிலையங்கள் கட்டப்படவில்லை எனவும், இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையரிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. இந்நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 6 வார காலத்திற்குள் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனவும், இனி புதிதாக கட்டப்படும் ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கட்டப்படும் எனவும் கூறினார். இந்த வழக்கை நீதிபதிகள் 6 வார காலத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.