ஆதார் கார்டு திருத்தங்களை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் அடையாள அட்டையாக ஆதார் அட்டை இருக்கிறது. உலக அளவில் பயோமெட்ரிக் விவரங்கள் அடங்கிய மிகப்பெரிய நிறுவனமாக ஆதார் அட்டை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆதார் அட்டையில் உள்ள திருத்தங்களை ஆன்லைனில் UIDAI என்பதில் மாற்றிக் கொள்ளலாம். இதனையடுத்து ஆதார் அட்டையில் உள்ள திருத்தங்களை மாற்றுவதற்காக தற்போது தபால் நிலையங்களில் பணிபுரிபவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த பயிற்சி இதுவரை 48 ஆயிரம் தபால்காரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு ஆதார் அட்டையில் திருத்தங்களை செய்வதற்கான பயிற்சிகள் முடிவடைந்த பிறகு இனி வீட்டிற்கே நேரடியாக தபால்காரர்கள் வந்து ஆதார் அட்டையில் திருத்தங்களை செய்து கொடுப்பார்கள். மேலும் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் sewa kendra-வை திறப்பதை UIDAI நோக்கமாகக் கொண்டுள்ளது.