Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதலனுக்கு நடக்கவிருக்கும் திருமணம்…. கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என இளம்பெண் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம் பகுதியில் பசிக்கும் ஒரு இளம்பெண் மத்திய அரசு நிறுவனத்தில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த இளம்பெண் நேற்று கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, முகநூல் மூலமாக ஒரு வாலிபருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து என்னை காதலித்த அந்த வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார்.

ஆனால் என்னை திருமணம் செய்து கொள்ளாமல் அந்த வாலிபர் ஏமாற்றிவிட்டார். மேலும் வருகின்ற 17-ம் தேதி வேறு ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்யப்போகிறார். எனவே அந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென இளம்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வில்லிவாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |