பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கணவன், மனைவி ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் வசிக்கும் வாலிபர் தனது நண்பரை பார்ப்பதற்காக வேடப்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது மின்வாரிய அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்த ஒருவர் வாலிபரை வழிமறித்து தனது வீட்டில் அழகான பெண்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து பணம் கொடுத்தால் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என அந்த நபர் தெரிவித்துள்ளார். பின்னர் வாலிபர் சரி என்று கூறி அந்த நபருடன் சென்றுள்ளார். இதனை அடுத்து ஏ.டி.எம் சென்று பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு அந்த வாலிபர் வடவள்ளி காவல் நிலையத்திற்கு சென்று தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்த போது அந்த வீட்டில் விபசாரம் நடத்தியது உறுதியானது. இதனை தொடர்ந்து வீட்டிலிருந்த 20 மற்றும் 36 வயது இளம்பெண்களை காவல்துறையினர் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபச்சாரம் நடத்திய குற்றத்திற்காக தனசேகரன் மற்றும் அவரது 2-வது மனைவி பூங்கொடி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.