மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்புகளின் தரம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஒரு முக்கிய முடிவினை எடுத்துள்ளது. அதன்படி உயர் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டிகளில் பி.எட் படிப்புகளை மத்திய அரசு தொடங்க இருக்கிறது. இந்நிலையில் 71 தொழிற் பயிற்சி நிலையங்களை நவீன தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை நிறுவனம் புனேவில் உள்ள டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் தலைமைச் செயலகத்தில் வைத்து தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன் மூலம் மாணவர்களுக்கு நவீன முறையில் கல்வி கற்றுக் கொடுக்கப்படும். அதன்பிறகு பெரும்பாலான பி.எட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பி.எட் கல்லூரிகளில் தகுதியான பேராசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் இல்லை. இதன் காரணமாகத்தான் மத்திய அரசு ஐ.ஐ.டிகளில் பி.எட் படிப்புகளை தொடங்குவதற்கு முடிவு செய்துள்ளது. மேலும் ஐ.ஐ.டிகளில் பி.எட் படிப்பானது இந்த கல்வி ஆண்டு முதல் தொடங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.