Categories
தேசிய செய்திகள் பல்சுவை

வாடிக்கையாளர்களே….! இனி இப்படித்தான் டெலிவரி…. அமேசான் நிறுவனம் அசத்தல் திட்டம்….!!!!

டிரோன்கள் மூலம் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்யும் திட்டத்தை அமேசான் நிறுவனம் தொடங்க உள்ளது. உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் உலக அளவில் 31 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். செல்போன் செயலின் மூலம் பொருட்களை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை கொடுக்க பல்வேறு புதுமைகளை அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி டிரோன்கள் மூலம் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே பொருட்களை அனுப்பும் திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. முதற்கட்டமாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு நகரில் உள்ள வாடிக்கையாளர்காலுக்கு டிரோன் மூலம் பொருட்கள் அளிக்கப்பட உள்ளது. வாடிக்கையாளர்களின் வீடுகளில் தரையிறங்கும் பொது செடிகளில், சுவர்கள் உள்ளிட்ட பல்வேறு தடைகளை துல்லியமாக உணர்ந்து தவிர்க்க நவீன சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது. உடனடியாக நகரங்களுக்கும், மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

Categories

Tech |