காணாமல் போன புதுபெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பத்தில் 18 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் கடலூரில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவிக்கும் அதே பகுதியில் வசிக்கும் வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இதனை அறிந்த இருவீட்டாரும் பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் மாணவிக்கு 18 வயது பூர்த்தி ஆகாததால் வருகிற 17-ஆம் தேதி திருமணம் நடத்த பெற்றோர் நிச்சயம் செய்தனர். இந்நிலையில் புதுப்பெண் திடீரென காணாமல் போய்விட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.