Categories
தேசிய செய்திகள்

குடியரசு தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு ….!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்தியப் பொருளாதாரம் கடந்த ஆறாண்டுகளாக கண்டிராத வகையில் சரிந்துள்ளது.

இந்நிலையில் நிதியமைச்சர் தாக்கல் செய்யும் நாட்டின் வரவு-செலவு திட்ட நிதிநிலை அறிக்கையானது, சரிந்த பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அறியும் வகையில் அமைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திரா காந்திக்கு பிறகு நாட்டின் இரண்டாவது பெண் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 2020-21ஆம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் இது.

அதற்கான பட்ஜெட் உரை காலை 11 மணி அளவில் தொடங்கும். இந்த உரை சுமார் 90 நிமிடங்கள் முதல் 120 நிமிடங்கள் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய  நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்_தை சந்தித்தார்.

Categories

Tech |