தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு கடனுக்கு பெட்ரோல் டீசல் வழங்குவதை நிறுத்துவதாகவும், பணம் கொடுத்தால் மட்டுமே பெட்ரோல் டீசல் வழங்கப்படும் எனவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. தமிழகத்தில் காலை முதல் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வந்தது.
கடந்த 25 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை ஆகி வருவதால், ஏற்பட்ட இழப்பை சமாளிப்பதற்காக செயற்கையாக பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்து இருந்தது. இந்நிலையில் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்குவதை நிறுத்த போவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் நாளை முதல் பெட்ரோல் டீசல் கிடைக்குமா? என்று வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.