கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கும்பக்கரை என்ற அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குளிக்க வருவது வழக்கம். இந்நிலையில் கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது அருவியில் நீர் வரத்து குறைந்துள்ளதால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.