நயன்தாராவால் முடியது, அவர் செய்கிறார். உங்களுக்கு என்ன என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா, நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஏழு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஈசிஆரில் இருக்கும் ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்கள் திருமணத்திற்காக ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றும், அனைத்து செலவுகளையும் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் ஏற்றுக் கொண்டது என்றும் தகவல் வெளியானது. நயன்தாரா தன் திருமண வீடியோவை நெட்ப்ளிக்ஸுக்கு 25 கோடிக்கு விற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் திருமணத்தில் கூட லாபம் பார்த்து விட்டார் என விமர்சனம் செய்தார்கள். இதை பார்த்த ரசிகர்கள் கூறியுள்ளதாவது, அவரால் முடிந்தது. அதனால் திருமண வீடியோவை விற்றுவிட்டார். பிரபலமாக இருப்பதால் இது நடந்திருக்கின்றது. அவரின் திருமண செலவை ஓடிடி நிறுவனம் செய்தது. அதனால் உங்களுக்கு என்ன வந்தது எனக் கூறி இருக்கின்றனர்.