மகரம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு தீவிர தெய்வ பக்தியாக மனதில் நிம்மதி அதிகரிக்கும்.
இன்று உங்களுக்கு புண்ணியத் தலங்கள் செல்லலாமா என்ற சிந்தனையும் ஏற்படும். ஆன்மிக பயணங்கள் மேற்கொள்ளலாமா என்ற சிந்தனையும் மேலோங்கும். ஒட்டுமொத்தத்தில் தெய்வீக எண்ணங்கள் மட்டுமே உங்களுக்கு அதிக அளவில் இருக்கும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மழலைச் செல்வம் கிட்டும்.
திருவருளாலும் குருவருளாலும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். இன்று நீங்கள் புனித பயணங்களால் ஆனந்தம் கொள்வீர்கள்.
உற்சாகத்துடன் இருப்பீர்கள். கணவன் மனைவி இருவருக்கும் இடையே விட்டுக் கொடுத்து செல்வது சிறந்தது. சில நேரங்களில் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். முன்கோபம் மற்றும் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டால் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்கள் முயற்சியில் ஓரளவு முன்னேற்றம் உள்ளது. இன்று நீங்கள் கடுமையான முயற்சி செய்து வெற்றி அடைவீர்கள். இன்று நீங்கள் தேவைகளைக் கூட ஓரளவு பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சொன்ன சொல்லை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு மேலோங்கும். யாருக்கும் எவ்விதமான வாக்குறுதிகளும் கொடுக்க வேண்டாம். இன்று உங்களுக்கு தேவையான அளவில் பணவரவு கிட்டும். இன்று நீங்கள் பணவரவை சேமிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்வது சிறந்தது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் உதவி கிடைக்கும். வசீகரமான தோற்றம் மற்றும் முகம் கவர்ச்சியும் அதிகரிக்கும். பெண்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றகரமான நாளாகவே இருக்கும். நீங்கள் நினைத்த பொருளை வாங்குவீர்கள். இன்று உங்களுக்கு ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை கைகூடும். ஏற்றுமதி துறை சார்ந்தவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கிட்டும். விவசாயம் துறையில் உள்ளவர்களுக்கும் வெற்றி கிடைக்கும்.
இன்று மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சியில் அனைத்தும் வெற்றி வாய்ப்பு கிட்டும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் சித்தர் மற்றும் குரு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் நீலம் நிறம்.