மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்தியப் பொருளாதாரம் கடந்த ஆறாண்டுகளாக கண்டிராத வகையில் சரிந்துள்ளது.
இந்நிலையில் நிதியமைச்சர் தாக்கல் செய்யும் நாட்டின் வரவு-செலவு திட்ட நிதிநிலை அறிக்கையானது, சரிந்த பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அறியும் வகையில் அமைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்_தை சந்தித்ததை தொடர்ந்து நாடாளுமன்ற வளாகம் வந்தடைந்தார். அவரை தொடர்ந்து பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நாடாளுமன்றம் வந்துள்ளனர்.