பெங்களூர் மாநிலத்தில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தவர் நிசர்சா வயது 19. இவர் அந்த கல்லூரியில் டிரைவராக வேலை பார்த்த நிக்கி வயது 29 என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவருடைய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 13ஆம் தேதி திடீரென நிசர்சா மாயமாகியுள்ளார்.மாயமான தன்னுடைய மகளை மீட்டுத்தரக் கோரியும் கடத்திச் சென்றிருக்கலாம் என்று கூறி நிசர்சாவின் பெற்றோர் கர்நாடகா ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிலையில் பெங்களூர் பகுதியில் வசித்து வந்த நிசர்சா – நிக்கியை காவல்துறையினர் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நிசார்சா, தனக்கு 18 வயது பூர்த்தி அடைந்து விட்டதாகவும், என்னுடைய வாழ்க்கையை தீர்மானிக்கும் முடிவு என்னுடைய கையில் இருக்கிறது என்று கூறினார். மேலும் தனக்கும் நிக்கிகும் திருமணம் முடிந்துவிட்டது என்றும், இனி அவருடன்தான் வாழ்வேன் என்றும் கூறியுள்ளார். அப்போது பேசிய நீதிபதிகள், குழந்தைகளுக்காக பெற்றோர்கள் தங்களுடைய உயிரை தியாகம் செய்யவும், பெற்றோருக்காக குழந்தைகள் தங்களது உயிரை தியாகம் செய்யவும் இருக்கிறார்கள் என்பதே வரலாறு வெளிப்படுத்துகிறது.
பெற்றோர் குழந்தைகள் இடையே அன்பு பாசம் இருந்தால் குடும்பத்தில் விரிசல் ஏற்படாது இந்த வழக்கில் பெற்றோரின் அன்பை விட காதல் சக்திவாய்ந்த ஆயுதம் என்று வெளிப்படுகிறது. காதலுக்கு கண் இல்லை என்று நீதிபதிகள் கூறினர். மேலும் அந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.